மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு, புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறிய அவர்கள், மத்திய அரசையும், அதற்கு துணை போன மாநில அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


No comments:
Post a Comment