சென்னை மாநகராட்சிக்கு ரூ.2.7 கோடி சொத்துவரி கட்டாமல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பாக்கி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
1949-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் திமுக உருவாக்கப்பட்டபோது, கட்சி பணிகளுக்காக சென்னை ராயபுரத்தில் 1951-ம் ஆண்டு சிறிய அளவில் ஒரு கட்டம் கட்டப்பட்டு, "அறிவாலயம்" என பெயர் சூட்டப்பட்டது.பின்பு 1964-ல் சென்னை தேனாம்பேட்டையில் கட்சிக்காக ஒரு கட்டம் கட்டப்பட்டது அதற்கு "அன்பகம்" என பெயர் வைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு அண்ணா சாலையொட்டி 86 கிரவுண்ட் இடம் வாங்கப்பட்டது. 1980-ம் ஆண்டு முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப கடந்த கட்டம் கட்டி முடிக்கப்பட்டு அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்பட்டு, கடந்த 16-9-1987-ம் ஆண்டு கோலாகமாக திறப்பு விழா செய்யப்பட்டது.
தற்போது திமுக கட்சி தலைமை அலுவலமாக செயல்பட்டு வரும் அண்ணா அறிவாலயத்தில், பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு மருத்துவம மனையும், முக்கியப் பிரமுகர்கள் இல்ல திருமணத்திற்காக ஒரு திருமண மண்டபமும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. அண்ணா அறிவாலயம் மெயின் பில்டிங், மருத்துவமனை, திருமண மண்டபம் உள்ளிட்டவை குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வரி விதித்தனர்.
இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்திற்கு சொத்து வரியாக ரூ.14.4 லட்சமாக இருந்தது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் சொத்து வரி ரூ. 91. 346 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment