சட்டவிரோதமாக பூமியில் இருக்கும் நீர் மற்றும் கிணற்றில் உள்ள நீரை பல நிறுவனங்கள் முறைகேடாக எடுத்து வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், " தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்குள் இது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவான 15 விழுக்காடு நீரை மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ஏன் ஆலைகள் செயல்படுத்தவில்லை.
ஏழை மக்களுக்கு நீர் வழங்காத நிறுவனங்கள் செயல்படாமலேயே இருக்கலாம். அவைகளை இழுத்தும் மூடலாம். நீதிமன்ற உத்தரவினை தமிழகத்தில் உள்ள 143 நிறுவனங்களே செயல்படுத்தியுள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறினால் அந்த நிறுவனங்கள் தேவையே இல்லை.. ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காமல் இருந்தால் இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment