புதுச்சேரியில் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி நகர அரசுப்பள்ளியின் கணித ஆசிரியைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,
ஆசிரியர் சென்ற 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்கிடையே, புதுச்சேரி, வாதானுாரில் சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பள்ளியில் மாணவி வந்து சென்ற வகுப்பறை பூட்டப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அந்த மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 மாணவிகளைப் பரிசோதனைக்காக பள்ளிக்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் சுகாதாரத் துறையினர் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், வாதானுார் சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியை மூட வேண்டும் என்று, என்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ., டிபிஆர் செல்வம் தெரிவிக்கையில், "மாணவிக்குக் கொரோனா வந்தவுடன் பள்ளிக்கு விடுமுறை அளிக்காமல், திறந்து மாணவர்களுக்கு பரிசோதனை நடத்துவதை கண்டிக்கிறேன். மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அரசு ஏற்படுத்துகிறது.
புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பள்ளிகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? அதற்கான இழப்பை முதல்வர், அமைச்சர் சரிசெய்வார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment