
தர்மபுரி: திமுக எம்பியை, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த அந்த பத்மபிரியா யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், படு ஸ்மார்ட்.. ஒருபக்கம் ரஜினியின் சர்ச்சை கருத்து என்றால், அவரை உண்டு இல்லை என்றாக்கிவிடுவார்.. மற்றொரு பக்கம் பாமகவை கேள்வி கேட்டு தெறிக்க விடுவார்.. அதுவும் ஐயா என்று சொல்லியே கேள்வி எழுப்புவார்.
இவ்வளவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே அதகளப்படுத்திவிடுவார்.. அதனால் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கும்.. அதேசமயம் எதிர்மறை கமெண்ட்களும் அளவுக்கு அதிகமாக இவருக்கு எழுந்து விடும்.
இப்போது இவருக்கு யாரோ கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. இவரது இணைய தள முகவரிக்கு பத்மபிரியா என்பவர் பெயரில், ஒரு செய்தி வந்துள்ளது... அதை செந்தில்குமார் எம்பி, படித்து பார்த்துவிட்டு அதிர்ந்துவிட்டார்.. தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அதில் வரிகள் இருந்தன.
இதுகுறித்து உடனடியாக தர்மபுரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்... அதில் இணைய வழியில் வந்த செய்தியில், தன்னை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்... அவர் யார் என்பது குறித்து விசாரித்து கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. இதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்... இந்த சம்பவம் தர்மபுரி திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment