
புதுடில்லி: இந்தியா முழுவதும் உள்ள 130 கோடி மக்களுக்கு கொரோனா
தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ரூ.51 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்க 3 தடுப்பூசிகள்
தற்போது மனித சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ஆக்ஸ்போர்டு -
அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் 130 கோடி மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி
செலுத்த நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு கிட்டத்தட்ட 700 கோடி
டாலர்களை (சுமார் ரூ.51,642 கோடி) ஒதுக்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தியை
டைம் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் உயரதிகாரிகள்
கூறியதாவது:கொரோனா தடுப்பூசிக்காக ஒரு நபருக்கு அனைத்து செலவும் சேர்த்து 6
முதல் 7 டாலர் வரை (சுமார் ரூ.450 முதல் ரூ.550 வரை) செலவிட
வேண்டியிருக்கும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. முதல் டோஸ் மற்றும்
பூஸ்டர் டோஸ் என ஒருவருக்கு 2 முறைதடுப்பூசி போடப்படும். இதன்படி
தடுப்பூசிக்கான செலவு மட்டும் ஒரு நபருக்கு 2 டாலர் (ரூ.150) செலவாகும் என
மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அதனை இருப்பு வைத்தல், போக்குவரத்து,
கட்டமைப்பு மற்றும் பிற தேவைகளுக்காக ஒரு நபருக்கு 4 முதல் 5 டாலர் வரை
செலவிட வேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment