வெளிமாநிலங்களில் இருந்து
வரத்து குறைந்ததால் திருச்சி வெங்காய சந்தையில் சாம்பார் வெங்காயம் கிலோ 70
ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திரா,
கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக
திருச்சி சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் மொத்த
விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்க்கும், பெரிய வெங்காயம் கிலோ
60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனை
கடைகளில் சாம்பார் வெங்காயம் கிலோ 90 லிருந்து 100 ரூபாய் வரை விற்பனை
செய்யப்படுவதால் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை
தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment