Latest News

  

விவசாயிகளுக்கு Good News: Solar Pump-களுக்கான கடன் குறித்து அரசாங்கத்தின் பெரிய அறிவிப்பு!!

 

புது தில்லி.: விவசாயிகள் இப்போது மலிவான விலையில் சோலார் பம்புகளுக்கான (Solar Pumps) கடன்களைப் பெற முடியும். இது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்ரி இன்ஃப்ரா நிதியை (Agri Infra Funds) சோலார் பம்பிற்கு பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, ​​அரசாங்கத்திடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வேளாண் நிதி உள்ளது. விவசாயிகளுக்கு அக்ரி இன்ஃப்ரா நிதி மூலம் மலிவான கடன்கள் கிடைக்கும். 2022 ஆம் ஆண்டிற்குள் 17.50 லட்சம் சோலார் பம்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) சோலார் பம்ப் கடன் தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது.

சோலார் ஆலைகள் மற்றும் Compressed Bio Gas செயல்பாடுகளுக்கு விவசாயிகள் இப்போது எளிதான கடன்களைப் பெறுவார்கள்.

இதனால் என்ன லாபம்:

சோலார் ஆலைகள் (Solar Plants) மற்றும் compressed bio gas கருவிகளை அமைப்பதற்கு விவசாயிகள் இப்போது எளிதான கடன்களைப் பெறுவார்கள். இதுவரை எந்தெந்த மாவட்டங்களில், வங்கிகள் முன்னுரிமை வகை கடன்களை குறைவாக விநியோகித்து வந்தனவோ, அந்த மாவட்டங்களுக்கு இனி வங்கிகள் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆம், இனி விவசாயிகள் எளிதாக கடன் வாங்க முடியும்.

PM Kisan திட்டத்தின் கீழ் இந்த மாநில விவசாயிகளுக்கு மட்டும் 10,000 ரூபாய் கிடைக்கும்: விவரம் உள்ளே!!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி அரசு பிரதம மந்திரி குசும் திட்டத்தையும் (PM Kusum Scheme) நடத்தி வருகிறது. ஏழைகள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் (Garib Kalyan Rojgar Abhiyaan) கீழ், குசூம் யோஜனாவின் உதவியுடன் ராஜஸ்தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க சோலார் பம்புகள் கிடைக்கின்றன. விவசாயிகள் தங்கள் நிலத்தில் சோலார் பேனல்களை (Solar Panel) வைத்து தங்கள் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம். சோலார் பேனல்கள் அமைப்பதற்கு விவசாயிகள் 10 சதவீதம் மட்டுமே செலுத்த வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் மானியத் தொகையை அளிக்கிறது.

புதிய வழிகாட்டுதல்களில், முன்னுரிமைத் துறையின் கீழ் கடன்களை வழங்குவதில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட பி.எஸ்.எல் வழிகாட்டுதல்கள் பின்தங்கிய பகுதிகளுக்கு கடன் அணுகலை மேம்படுத்தும். இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் சமூகத்தின் பலவீனமான மக்களுக்கும் அதிக கடன்கள் கிடைக்கும். மேலும், இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுகாதார உள்கட்டமைப்புக்கான கடனை அதிகரிக்கும்.

நாட்டில் முன்னுரிமைத் துறைகள் என்ற கருத்து 1972 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள் தங்களின் மொத்த கடன்களில் 33% முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்குமாறு 1974 இல் அறிவுறுத்தப்பட்டன. இதற்காக வங்கிகளுக்கு 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இதன் பின்னர், நாட்டில் முன்னுரிமைத் துறைகளின் கடன்களின் வழிகாட்டுதல்களும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதற்கு முன், ஏப்ரல் 2015 இல், முன்னுரிமைத் துறை கடன்கள் குறித்த வழிகாட்டுதல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.