
ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலங்கையின் ரத்னபுரா மாவட்டத்தை சேர்ந்த எம்.பி பிரேமலால் ஜெயசேகரா அண்மையில் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கை பொதுஜன பேராமுலா கட்சியின் மக்களவை உறுப்பினரான அவர்,2015 தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சி தொண்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கடந்த ஜூலை 31 அன்று மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் .
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தண்டனை பெறுவதற்கு முன்னரே அவர் தாக்கல் செய்திருந்ததால் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதித்தது . அதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் . ஆனாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதியேற்றுக்கொள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

அதனை எதிர்த்து பிரேமலால் ஜெயசேகரா நீதிமன்றத்தை நாடினார். அவர் பதிவியேற்க அனுமதி அளித்த நீதிமன்றம், நாடாளுமன்றம் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு நிற துண்டை தோளில் போட்டுகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.பதவி ஏற்றுக்கொண்ட பிரேமலால் ஜெயசேகரா அவை நடவடிக்கைகள் முடிந்ததும் மீண்டும் சிறைக்கே சென்றார்.

newstm.in
No comments:
Post a Comment