Latest News

அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரர்" நல்லக்கண்ணுவை நேரில் நலம் விசாரித்த உதயநிதி

நேர்மை- எளிமை-தூய்மை அரசியல்வாதியாய் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நல்லக்கண்ணு. அரசியல் சாக்கடை என்று சொல்லப்படும் காலக்கட்டத்தில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாய் மட்டுமல்ல, இயற்கை வளங்களை பாதுகாக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், சாதியொழிப்பு போராளியாகவும் முதுமை படர்ந்த 94 வயதிலும் இன்றுவரை இளைஞராக களத்தில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். எப்போதும் தமிழக மக்களின் நலனுக்காய் பார்க்கும் 'நல்லக்கண்ணு' அவர் என்பதாலேயே தமிழக மக்கள் மட்டுமல்ல எதிர்கட்சி தலைவர்களின் அன்புக்குரியவராக விளங்குகிறார் நல்லக்கண்ணு.

இந்நிலையில், கடந்தமாதம் 20 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உடல்நலம் தேறி பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து அரசியல் கட்சியினர் விசாரித்துவந்த நிலையில், இன்று திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் அரசியல் தலைவருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை சந்தித்தது பெருமித தருணங்களில் ஒன்று.

 Image

இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் "சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் அரசியல் தலைவருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை சந்தித்தது பெருமித தருணங்களில் ஒன்று" பூரிப்புடன் பதிவிட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.