Latest News

"நம் பிரார்த்தனை பலனளிக்கவில்லை " : இயக்குநர் பாரதிராஜா கண்ணீர்

துக்கத்தில் இருக்கும் போது வார்த்தைகள் வராது என இயக்குநர் பாரதிராஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தற்போது கவலைக்கிடமாக உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் எஸ்பிபி உடல்நிலை குறித்துக் கேட்க திரைப்பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்று கூறப்படுவதால் அங்குக் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாடகர் எஸ்பிபி சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா வருகை புரிந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, “சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. உணர்ச்சிவசப்படும் போது வார்த்தைகள் சிக்காது. எஸ்பிபி மிகப்பெரிய பாடகன், உலக மகா கலைஞன் என்பதை விட அவன் என் 50 ஆண்டு கால நண்பன். உலகில் உள்ள எல்லா மக்களும் பிரார்த்தனை செய்ததால் எழுந்து வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. மனிதன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனுக்கு மேலே ஒரு சக்தி உள்ளது . அதன் முடிவுதான் இது.ஆனாலும் எனக்கு இன்னும் ஒரு சின்ன நம்பிக்கை உள்ளது. அவனை மாதிரி ஒரு கலைஞனை இதுவரை பார்த்ததில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.