
அரசியல் காரணங்களுக்காகவே வேளாண் மசோதாக்கள் எதிர்க்கப்படுவதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், வேளாண் மசோதாக்கள் சட்டமாவதன் மூலம், விவசாயிகளின் வருவாய் பெருகும் என கூறியுள்ளார். 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, விவசாயிகளின் வருவாயைப் பெருக்க தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் மத்திய அரசின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டைப் போட காங்கிரஸ் கட்சி முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார். விளைபொருட்களுக்கான விலையை பெரும்பாலும் இடைத்தரகர்கள்தான் நிர்ணயிப்பதாகக் குறிப்பிட்ட நரேந்திர சிங் தோமர், இந்த சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்றார்.
தங்கள் விளை பொருட்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை, சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்றும் அது மத்திய அரசின் நிர்வாக ரீதியிலான முடிவு என்றும் குறிப்பிட்ட நரேந்திர சிங் தோமர், அந்த நடைமுறை தொடரும் என உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment