
புணேவில் சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம், புணேவில் சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவமனை உள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 3 வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment