
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இரு தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி என பல தலைவர்களையும் சந்தித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் சென்னை வந்த போது சந்தித்த அரசியல் தலைவர்களின் பட்டியல் மிகப்பெரியதாக உள்ளது.
அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்த சந்திப்பின் போது அவர் கே.எஸ்.அழகிரியுடன் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு, காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.

அதே போல் காங்கிரஸ் சார்பில் கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் குண்டுராவ் கலந்து கொண்டார். மேலும் வேளாண் மசோதாவுக்கு எதிராக தினேஷ் குண்டுராவ், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா உள்ளிட்டோர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதனால் குண்டுராவ் சந்தித்த நபர்களின் பட்டியல் பெரிதாக உள்ளதால் அவர் யாரை எல்லாம் சந்தித்தார் என்று விசாரணை நடைபெறுகிறது.
newstm.in
No comments:
Post a Comment