
ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளுடன் டெங்கு, மலேரியா
உள்ளிட்ட பருவகால நோய்களும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அடுத்த 3
மாதங்களுக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரதுறை
நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றன. தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
நிலவும் வானிலையால், தற்போதுள்ள கொரோனா தொற்றுடன் கூடுதலாக, வைரஸ்
காய்ச்சல், பன்றி காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு உள்ளிட்ட பருவகால
நோய்களும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முன்னதாக ஐதராபாத்தின்
சில நர்சிங்ஹோம்கள் மற்றும் கிளிக்குகளில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட
பருவகால நோய்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.கணிசமான
எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பரவுகின்றன.
இந்த பருவகால வியாதிகள், சீரற்ற வானிலையால் மேலும்
அதிகமான பாதிப்புகளை உண்டாக்ககூடும். டிச., வரை பருவகால வியாதிகள்
பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
அதிகாரிகள் எடுக்க வேண்டும். இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரி ஒருவர்
கூறுகையில், கொரோனாவுடன் பருவகால வியாதிகளும் உயர்ந்து வருவதால், தேவையற்ற
பொதுக்கூட்டங்களை தவிர்க்கவும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை
கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கையை பின்பற்றவும் மக்களை நாங்கள்
கேட்டுக் கொள்கிறோம். பருவகால நோய்களின் தாக்கம் காரணமாக அடுத்த 3 மாதங்கள்
மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த சுகாதார நடவடிக்கைகளால்,
தொற்று வியாதிகளின் தாக்கம் ஓரளவு குறையும் என சுகாதார துறை அதிகாரிகள்
கூறுகின்றனர். இதுவரை, செப்., 15 க்குள், கொரோனா பாதிப்புகளுக்கு
மேலதிகமாக, தெலுங்கானாவில் 500 க்கும் மேற்பட்ட பன்றிக்காய்ச்சல்
பாதிப்புகளும், சில இடங்களில் டெங்கு மற்றும் மலேரியா நோய்களும்
அடையாளங்கள் காணப்பட்டன.
No comments:
Post a Comment