
தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, விருப்பத்தின்பேரில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.
அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மாணவர்கள் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in
No comments:
Post a Comment