
இது குறித்து அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தி குறிப்பில் "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற உரிம ஒப்பதங்களில் இருந்து 2018ஆம் ஆண்டு 7427.4 மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளார்.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை. 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது 750 டாலர் வருமான வரி செலுத்தியுள்ளார். அதேபோல் 2017ம் ஆண்டும் செலுத்தியுள்ளார்.
அத்துடன் தான் வணிகம் இழைப்பை சந்தித்ததாக கூறி வருமானத்தை டிரம்ப் குறைத்து காட்டியுள்ளார். 2018ஆம் ஆண்டு 47.4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், அந்த ஆண்டில் 4,434.9 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது." என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை மறுத்துள்ள டிரம்ப், இது போலியான செய்தி.
உண்மையில் எனக்கு கிடைத்த வருமானத்திற்கு நான் வரி செலுத்தியுள்ளேன். என்று கூறியுள்ளார்.
டிரம்ப் நிறுவனங்களின் வழக்கறிஞரான ஆலன் கார்டன், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில்,"கடந்த காலங்களில், ஜனாதிபதி டிரம்ப் மத்திய அரசுக்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார், இதில் 2015 இல் தனது வேட்பு மனுவை அறிவித்ததிலிருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தி உள்ளார். என்று கார்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் 2016 ஆம் ஆண்டு அப்போதைய எதிர்கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுடன் நடத்தப்பட்ட விவாதத்தில் டிரம்ப், இதுவரை வரி செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டை ஹிலாரி முன்வைத்தார். அதற்கு டிரம்ப், அரசுக்கு வரி செலுத்தாது என்னுடைய திறமை என்று குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment