Latest News

  

Unlock 4: மெட்ரோ ரயில்கள் செப். 7 முதல் இயங்கும்!- தமிழக அரசு

மெட்ரோ ரயில்கள் செப். 7 முதல் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மெட்ரோ ரயில் சேவைகள் செப். 7 முதல் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மத்திய அரசு மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.