
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்றுக் கொள்வதை தடுப்பது கட்சியின் அழிவுக்கு வழிவகுக்கும் என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு சோனியா காந்தி இடைக்கால தலைவராக பதவியேற்றுக் கொண்டார். கட்சிக்கு நிலையான தலைமை வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையை ராகுல்காந்தி ஏற்றுக் கொள்வதை தடுப்பது கட்சியின் அழிவுக்கு வழிவகுக்கும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக முழு வலிமையுடன் நிற்கக்கூடிய தலைவர் காங்கிரஸில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் பேசுகையில், 'நேரு குடும்பத்தை சேராதவர்கள் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று பலரும் கூறுவது நல்ல யோசனை. ஆனால் இதற்கான கோரிக்கை வைத்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் யாருக்கும் அதற்கான திறன் இல்லை. காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் பரவி உள்ளது. ஆனால் வெவ்வேறு முகமூடிகளுடன் காணப்படுகிறது. அதனை தூக்கி எறிந்தால், அது ஒரு முக்கிய அரசியல் கட்சியாக உருவாகலாம்' என்று தெரிவித்துள்ளார். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியிடப்பட்ட கட்டுரையில், இதுதொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment