
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய தயாரிப்பில் COVID19 விரைவான சோதனை கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த விஞ்ஞானி கே.விஜயராகவன் பேசுகையில், ' இந்த சோதனை தொழில்நுட்பத்தில் கெமிக்கல் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் மற்ற முறைகளில் கெமிக்கல் மற்றும் ரிஏஜென்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இது டெர்ரா-ஹெர்ட்ஸ் அலைகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கண்டறிகிறது.
பேச்சை அடிப்படையாக கொண்ட கருவி ப்ரீதலைசர் முன் நோயாளி ஊதினாலோ அல்லது பேசினாலோ மாதிரி சேகரிக்கப்பட்டு உடனே முடிவுகளை அறிவிக்கக்கூடிய தொழில்நுட்பம் இதுவாகும். இந்த பரிசோதனை முறைகள் வெற்றியடைந்தால் கொரோனா பரிசோதனைகளை பாதுகாப்பாகவும் 30 வினாடிகளில் நடத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்
உமிழ்நீர் மாதிரியில் கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய சமவெப்ப சோதனை மற்றும் COVID-19 தொடர்பான புரதங்களை தனிமைப்படுத்த முற்படும் பாலிமினோ அமிலங்களைப் பயன்படுத்தி ஒரு சோதனை உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment