
பிரேசில்: கேர்ஃபோர் சூப்பர் மார்க்கெட்டில் மாய்சஸ் சாண்டோஸ் என்ற 59 வயது ஊழியருக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென அவர் உயிரிழந்ததை அடுத்து, அந்த சூப்பர் மார்கெட் நிர்வாகிகள் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாறாக செய்ததோ ஒரு மனிதாபிமற்ற, இரக்கமற்ற செயல். சாண்டோஸின் உடலை பெரிய குடைகள் வைத்தும், அட்டைப் பெட்டிகள் வைத்தும் மறைத்துள்ளனர் அந்த மனித மிருகங்கள்.
கூறிய காரணமோ இன்னும் அதிர்ச்சி. கடையில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்ததால் இதுபோன்று செய்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இச்செயலுக்கு நிறுவனம் மன்னிப்பும் கேட்டுள்ளது. எனினும் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு உடனே தகவல் தெரிவிக்காமல் கடையிலேயே உடலை மறைத்து வைத்தது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உயிரிழந்த சாண்டோஸின் மனைவியிடம் கேட்டபோது, "பணத்திற்காக இவர்கள் இதுபோன்று செய்தது மிகவும் கொடுமையான ஒன்று. இவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவர் உயிரிழந்துவிட்டார் என்பதைக் கூட இவர்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கவில்லை"என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment