சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல திமுக எம்எல்ஏவும், முன்னாள், போக்குவரத்து துறை அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர்கள், கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கும் கொரோனா பாதிப்பு என்பது காட்டுத் தீ போல பரவி வருகிறது. சென்னை, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக பதவி வகித்த அன்பழகன் கொரோனா நோய்க்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையைவிட பிற மாவட்டங்களில் 4 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகம்
மக்கள் பிரதிநிதிகள் பொது இடங்களுக்குச் செல்லும்போது புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போது, தொண்டர்கள் மற்றும் மக்கள் அவர்களுடன் நெருக்கமாக நிற்கிறார்கள். இதுவும் கொரோனா வைரஸ் பரவ ஒரு முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.
source: oneindia.com

No comments:
Post a Comment