
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில் முதல்முறையாக சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின் போது, சிஆர்பிஎப் மகளிர் பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதி வர்த்தகம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். அங்குள்ள கோத்திபாக் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் துணை ராணுவப்படையினர் கம்பீரத்துடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிஆர்பிஎப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் கூறுகையில் ' சிஆர்பிஎப் பிரிவின் 232 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்தவர்கள். சட்டம் ஒழுங்கு மட்டும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்.
ஆதலால், இது எங்களுக்கு புதிதானது அல்ல. ஆண் சிஆர்பிஎப் படையினருக்கு எந்தவிதத்திலும் நாங்கள் குறைந்தவர்கள் இல்லை. ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட அதே பயிற்சி முறைதான் எங்களுக்கும் வழங்கப்பட்டது' எனத் தெரிவித்தார்
அமர்நாத் யாத்திரை புறப்படுவதையடுத்து பாதுகாப்புபணியில் ஈடுபடுவதற்காக மகளிர் சிஆர்பிஎப் படையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடைசிநேரத்தில் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே சுதந்திரதின விழாவையொட்டி பாதுகாப்புப்பணியில் ஸ்ரீநகரில் ஈடுபட்டிருந்த போது, நேற்று நாகும் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு போலீஸார் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார். இதனால் ஷெர் இ காஷ்மீர் அரங்கைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் போலீஸார் சீல் வைத்தனர்.
சுதந்திரதின விழாவின்போது எந்தவிதமான தீவிரவாத தாக்குதலும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக கடுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.உயமான கட்டிடங்களில் போலீஸார், பாதுகாப்புப்பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஸ்ரீகரில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு மகளிர் சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment