
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கடந்த மே மாதம் ஒர அரசாணையை வெளிட்டது. அந்த அரசாணையின் படி, காரைக்கால் மாவட்டத்திற்கு பெட்ரோலுக்கு 28, டீசலுக்கு 21.80 வரியும் விதிக்கப்பட்டிருந்தது. அதே போல மாஹே பகுதியில் பெட்ரோலுக்கு 23.90% டீசலுக்கு 18.15%, ஏனாம் பகுதியில் பெட்ரோலுக்கு 25.70%, டீசலுக்கு 20% வரியும் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்துவதற்கான வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி மாநில பாமக நிர்வாகி தேவமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து இல்லாததால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூடடு வரியை ரத்து செய் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், மதிப்பு கூட்டு வரி சட்டபிரிவு 31ன் படி மாநிலங்கள் வரிக்குறைப்பை தான் அறிவிக்க முடியும், ஆனால் புதுச்சேரி அரசு இச்சட்டத்தின்படி பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியுள்ளதாக கூறி அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment