
புதுடில்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க
வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜன் தன்
வங்கிக் கணக்குத் திட்டத்தின் மூலம் இதுவரை 40.35 கோடி மக்கள்
பயனடைந்துள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தெரிவித்துள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி
அனைவருக்கும் வங்கிக் கணக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஜன் தன்
திட்டத்தை அறிமுகம் செய்தார். அதன்படி அந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தத்
திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 6
ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பிரதமர் ஜன் தன்
திட்டமானது, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கையில் அடிக்கல்லாக
இருக்கிறது.
நேரடி பணப்பரிமாற்றம், கொரோனா காலத்தில் நிதியுதவி
அளிப்பது, பிரதமர் கிசான் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில்
ஊதியம் வழங்குதல், ஆயுள் காப்பீடு திட்டம் என அனைத்துக்கும் முதல் படி
அனைத்து வயது வந்தோருக்கும் வங்கிக் கணக்கை உருவாக்கிக் கொடுத்தல்
ஆகும்.பிரதமர் ஜன் தன் திட்டம் நிறைவு செய்யும் தருவாயில் இருக்கிறது.
இதுவரை 40.35 கோடி மக்கள் ஜன் தன் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர். நிதி
உள்ளடக்கம் என்பது அரசாங்கத்தின் தேசிய முன்னுரிமையாகும். ஏனெனில் இது
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. ஏழைகள் தங்களின்
சேமிப்புகளை முறைப்படியான நிதிமுறைக்குள் கொண்டுவருவதற்கு ஜன் தன் திட்டம்
உதவுகிறது. தங்களுடைய குடும்பத்தினருக்குத் தேவையான பணத்தை
அனுப்புவதற்கும், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களின் படியிலிருந்து வெளியே
வரவும் இந்தத் திட்டம் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment