
தமிழகத்தில் புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. எனினும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும்
செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில்
இருக்கும் :-
- பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை. எனினும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்வதுடன் அதனை ஊக்குவிக்கலாம்
- திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் செயல்பட தடை
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர சர்வதேச விமானபோக்குவரத்துக்கு தடை தொடரும்
- புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவைக்கு தடை
- மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிறக்கூட்டங்கள், மற்றும் ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு
newstm.in
No comments:
Post a Comment