
பா.ஜ.க இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்வி கொள்கை இல்லாததால், பல ஏழை எளிய மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கற்க முடியாத நிலை உள்ளது என தெரிவித்தார். புதிய கல்வி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது என்றும் அவர் தெரிவித்தார். தி.மு.க வினர் நடத்தும் பள்ளிகளில் பல மொழிகள் கற்று தரப்படுகிறது என தெரிவித்த அவர், அவர்களின் போலி முகத்திரைக்கு எதிராக அந்த பள்ளிகள் முன்பு பா.ஜ.க இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக - பா.ஜ.க இடையேயான கூட்டணி உறவு குறித்து பேசிய அவர், கூட்டணி சிறப்பாக இருக்கிறது எனவும் கூட்டணி குறித்து தேவையற்ற சர்ச்சைகளை மக்கள் தான் உருவாக்குகிறார்கள் என தெரிவித்தார். மேலும் அவர், கூட்டணி குறித்து கட்சி தலைமை என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க முக்கிய பங்காற்றும். நாங்கள் தனித்து நின்றாலே 60 சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதிக அளவிலான பா.ஜ.க வினர் வரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வார்கள்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment