Latest News

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் தொடர்பில்லை: அமைச்சர்

திருநெல்வேலி : தூத்துக்குடி சம்பவத்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது அத்தகைய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலியாகினர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் வீதம் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது. அப்போது தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது: செக்காரக்குடியில் இறந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் முதல்வரின் உத்தரவுபடி உடனடியாக தலா 10 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. செக்காரக்குடி வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் எஸ்ஐ ரகு கணேஷால் தாக்கப்பட்டு இறந்த மகேந்திரன் இறப்பு குறித்து விசாரணையில் உள்ளது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் ஆட்டோ டிரைவர் குமரேசன் இறப்பு சம்பவம் குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு அரசு உடனடியாக நிதி வழங்குகிறது.

இந்துக்களாக இருந்தாலும் சிறுபான்மையினரான குமரேசன், மகேந்திரன் குடும்பத்திற்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை அல்ல .அரசு எந்த பாரபட்சமும் பார்க்கவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் அரசியல் தலையீடு இல்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உடன் என்னை தொடர்புபடுத்தி வெளி ஒரு தகவல்கள் உண்மை இல்லை. முற்றிலும் தவறானது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கேரளாவை சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே இத்தகைய பரபரப்பில் உறுப்பினர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
 
https://m.dailyhunt.in/news/india/tamil/dinamalar

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.