
தேனி மாவட்டம்¸ அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை
சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்து இருந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு
போதிய இரத்தம் இல்லாததால் அவர் உயிரை காப்பாற்ற O Positive ரத்தம் உடனடியாக
தேவைப்படுவதாக தகவல் கிடைத்தவுடன், தேனி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்
வினோத்குமார், விக்னேஷ் மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விரைந்து சென்று
மருத்துவமனையில் தக்க மருத்துவ பரிசோதனைக்குப் பின் ரத்த தானம் வழங்கியதால்
அந்தப் பெண் காப்பாற்றப்பட்டார். அந்தப் பெண்ணும் அவருடைய குழந்தையும்
நல்ல முறையில் நலமுடன் உள்ளனர்.
No comments:
Post a Comment