Latest News

கழிவறை மற்றும் முறையான உணவு இல்லாத காரணத்தால் கரோனா நோயாளிகள் பாதிப்பு...

திண்டிவனம்: செஞ்சி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மொத்தமே இரண்டு கழிவறைகள் மட்டுமே பயன்பாட்டுக்கு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதால் அங்குள்ள நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இங்கு ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவும் தரமில்லாமல் இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இங்குள்ள நோயாளிகளுக்கு நடமாடும் கழிவறைகளை அல்லது இக்கல்லூரியில் உபயோகம் இல்லாமல் இருக்கும் மற்ற கழிவறைகளை உபயோகித்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கிய பிரச்சனையாக கழிவறை இல்லாத காரணத்தினால் இங்குள்ளவர்கள் சுற்றுப்புற பகுதிகளில் தங்கள் இயற்கை உபாதையை கழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார துறையினர் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு செய்து நடமாடும் கழிவறை மற்றும் சுகாதாரமான உணவினை தருவதற்கு முன்வரவேண்டும் என்றும் இல்லையென்றால் இங்கு தங்கியுள்ள நோயாளிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.