
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர், கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பல்வேறு அரசு நிகழ்ச்சி, கொரோனா தடுப்பு பணிகளில் பங்கேற்றார். குறிப்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மேலும் மறைந்த தலைவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இவருடன் கடந்த வாரத்தில் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவை ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பியுள்ளனர். தற்போது தமிழகத்தில் மூன்றாவது ஆட்சியராக சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment