
பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் ஐக்கியமானவா்தான் நாகா்கோவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன். ரியல் எஸ்டேட் அதிபரான இவா் நாகா்கோவில் அடுத்த கோட்டார் பகுதியைச் சோந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் போலீசார் நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்ததையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில், நாஞ்சில் முருகேசனுக்கும் கோட்டார் பகுதியைச் சோந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதாம். இவா் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது அந்தப் பெண்ணின் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த அந்தச் சிறுமியின் தாயார் கூட நாஞ்சில் முருகேசனை கண்டிக்கவில்லையாம். இதனால் அந்தச் சிறுமி அவள் காதலிக்கும் வாலிபனிடம் சொல்லியதையடுத்து அந்தச் சிறுமியும் வாலிபனும் வீட்டை விட்டு ஓடி விட்டனா்.
இதையடுத்து மகளைக் காணாத தாயார் போலீசில் புகார் கொடுத்தன் அடிப்படியில் போலீசார் தேடி வந்த நிலையில் அந்தச் சிறுமியும் வாலிபனும் போலீசில் சரணடைந்தனா். அப்போது அந்தச் சிறுமி போலீசாரிடம் அம்மாவைச் சந்திக்க வரும் நாஞ்சில் முருகேசன் தனக்குப் பாலியல் தொல்லை தந்ததைச் சகித்துக் கொள்ள முடியாததால் தான் அந்த வாலிபனுடன் ஓடியதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து தான் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளின் புகாரின் பேரில் போலீசார் நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தலைமறைவான நாஞ்சில் முருகேசனை பிடிக்க இரண்டு தனிப்படை போலீசார் அமைக்கபட்டு தேடிவருகின்றனா் என்றனா்.
Newstm.in
No comments:
Post a Comment