
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜனுக்கு பிறகு புதிய ஆளுநராக பதவியேற்றவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த இவர், தனிப்பட்ட காரணங்களால் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார்.
இந்நிலையில் உர்ஜித் படேலுக்கும் , மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மத்திய அரசு செய்ய இருந்த திருத்தங்களுக்கு உர்ஜித் படேல் உடன்படவில்லை என்பதாலும், அவர் பதவியிருந்து விலக நேர்ந்தது’ என ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் ஆச்சார்யா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில்,
வங்கி முறையைச் சீரமைக்க முயன்றதற்கு உர்ஜித் படேல் தனது பதவியை இழக்க நேர்ந்தது. வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களைப் பின்தொடர்ந்து பெற பிரதமர் விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment