தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா
தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு திறம்பட
மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும்
அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் தலைநகர் தில்லியில் இன்று மேலும்
438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது.
இத்துடன் அங்கு
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9,333ஆக
உயர்ந்துள்ளது. அதில் 5,278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24
மணிநேரத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 408
குணமடைந்த நிலையில் இத்துடன் ஒட்டுமொத்தாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை
3,926ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் 76 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட
இடங்களாக உள்ளன. மேலும் 1983 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
No comments:
Post a Comment