
விசாகப்பட்டினம்: மகப்பேறு விடுமுறையை ரத்து செய்து திரும்பிய
மாநகராட்சி ஆணையர்... கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் 6 மாத மகப்பேறு
விடுமுறையை ரத்து செய்துவிட்டு குழந்தையுடன் மீண்டும் பணிக்கு திரும்பிய
மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லாவுக்கு பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.
கொரோனா
வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிப்பு
அதிகரித்து வரும் நிலையில் ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
நோய் தொற்றை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றது. இங்கு கொரோனாவுக்கு 427 பேர் பாதிக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.
இந்நிலையில்
விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லா மகப்பேறு காரணமாக
விடுமுறையில் உள்ளார். பொதுவாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்
பணியாற்றும் பெண்களுக்கு 6 மாதங்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு
விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
தொடர்ந்து,
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீஜனாவிற்கும்
குழந்தை பிறந்தது. ஆனால் 5 மாத விடுமுறையை ரத்து செய்துவிட்டு பணிக்கு
மீண்டும் திரும்பியுள்ளார் ஆணையர் ஸ்ரீஜனா. அதுவும் பிறந்து ஒரு மாதமே ஆன
கைக்குழந்தையுடன் அவர் பணியாற்றியதை கண்டு ஏராளமானோர் பாராட்டினர்.
மகப்பேறு
விடுமுறையின் போது அரசு நிர்ணயித்த கால அளவை விட சம்பளம் பிடித்தாலும்
பரவாயில்லை என விடுமுறையை பெரும்பாலானோர் நீட்டிப்பார்கள். ஆனால் குழந்தை
வளர்ப்பை போல் மக்கள் பணியும் முக்கியம் என ஸ்ரீஜனா கருதியதை மத்திய
அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது டுவிட்டர் பக்கத்தில்
பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து
அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது : கொரோனா காலங்களில் நெருக்கடியை
புரிந்து கொண்டு பணியும் முக்கியம் என கருதி மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா
வேலைக்கு திரும்பியது மகிழ்ச்சி. இது போன்ற கொரோனா போராளிகளை அடைய நம் நாடு
அதிஷ்டம் செய்துள்ளது.
அவருக்கு
எனது பாராட்டுக்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீஜனா
கூறுகையில் மனிதாபிமானமுள்ளவராக மாவட்ட நிர்வாகத்திற்கு என்னால் இயன்ற
உதவியை செய்வது என்பது எனது கடமை. இந்த நேரத்தில் அனைவரும் கொரோனாவை
எதிர்த்து ஓரணியாக நிற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment