கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2030ஐ கடந்த நிலையில்,
தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் வரும்
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு
போடப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள்
பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெளியூர்களில் வேலைக்காக சென்றோர் வீடு
திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் ஊர் வி.ஏ.ஓவிடம் கையொப்பம் பெற்று உங்கள் பகுதி ஆர்.டி.ஓவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளிமாவட்ட பயணம் மேற்கொள்ள முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment