
ஊரடங்கின் போது உதவும் வகையில் மத்திய அரசு அறிவித்த
பெண்களுக்கான ரூ.500 உதவித்தொகை நாளை முதல் அவர்களின் ஜன் தன் வங்கி
கணக்குகளில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால்
வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை காக்க
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த
வகையில், ஊரடங்கு காலத்தில் உதவுவதற்காக பிரதமரின் கரிப் கல்யான்
திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களின் ஜன் தன் கணக்குகளில் ரூ.500 வீதம்
மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி,
வங்கிகள் நாளை முதல் பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் முதற்கட்டமாக
தலா ரூ. 500 வீத செலுத்தும் என அறிவித்துள்ளன. இந்தத் தொகையை அவர்கள் வரும்
ஏப்ரல் 9ஆம் தேதிக்குப் பின்னர் வங்கிகளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய
இந்தத் தருணத்தில் பெண்கள் கூட்டமாக சென்று பணத்தை எடுக்காமல்
தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
newstm.in
No comments:
Post a Comment