ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில்,
ரமலான் நோன்பு இந்த மாதத்திலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு
நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், ரமலான் நோன்பை
எப்படி பாதுகாப்பாக கடைபிடிப்பது என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகளுடன்,
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கூட்டத்தில் ரமலான் நோன்பு தொழுகையை வீட்டிலேயே செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
நோய் தொற்றும் ஏற்படும் அச்சத்தால் நோன்பு கஞ்சியை
வீட்டிலேயே காஞ்சி கொள்ளவும், யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் அரசு
அறிவுறுத்தியுள்ளது. அரசு அளிக்கும் அரிசி ஒவ்வொரு மசூதிகளில் இருந்தும்
வீடுகளுக்கு அந்தந்த ஜமாத்கள் மூலமாக வழங்கப்படும் என கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. அரிசி நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்கப்பட்டு
விடும், டோக்கன் மூலமாக வீடுகளுக்கு ஜமாத்கள் வழங்குவார்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment