லண்டன்: கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் மருத்துவமனையின்
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரிட்டிஷ் பிரதமா் போரிஸ் ஜான்சன் உடல்
நலம் தேறியதால் சாதாரணப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 3
நாள்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்
நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டதால், சாதாரண வார்டுக்கு
மாற்றப்பட்டார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமா்
அலுவலக செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கரோனா
நோய்த்தொற்று காரணமாக லண்டனிலுள்ள புனித தாமஸ் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமா் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சற்று மோசமானதால்,
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
55 வயதாகும் போரிஸ் ஜான்சனுக்கு கரோனோ
நோய்த்தொற்று இருப்பது 13 நாள்களுக்கு முன்னா் உறுதிப்படுத்தப்பட்டது.
உலகத் தலைவா்களிலேயே முதல் முறையாக அவருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது
பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட போரிஸ் ஜான்சன், அங்கிருந்தபடியே தனது அலுவல்களை கவனித்து வந்தாா்.
இந்த
நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எனினும், அவருக்கு
கரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் அதிகமாகி, உடல் நிலை மோசமடைந்ததைத்
தொடா்ந்து, அவா் தீவிர சிகிச்சை பிரிவுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்ட
நிலையில் தற்போது உடல் நலம் சீரானதை அடுத்து சாதாரண வார்டுக்கு
மாற்றப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment