கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு
பிறப்பித்துள்ளது. ஒரு மனிதனின் எச்சில் மூலமாகவும் வைரஸ் பரவும் என்பதால் ,
அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில்
இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வல்லப்வாடி என்ற பகுதியில் ஒரு மர்மப்
பெண் அங்குள்ள வீடுகளில் வரிசையாக பிளாஸ்டிக் கவர்களில் எச்சில் துப்பி அதை
தூக்கி எறிந்த காட்சி சி.சி.டிவி கேமராவில் பதிவானது இதனையடுத்து அந்த
பகுதியினர் பெரும் பதட்டம் அடைந்து காவல்துறையினருக்கும் தகவல்
கொடுத்துள்ளனர்.
காவல்துறையினர்
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி
தெளிக்க ஏற்பாடு செய்தனர்.
அதுமட்டுமின்றி சி.சி.டிவி கேமராவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனாவுக்கு
எதிராக உலகமே போராடி வரும் நிலையில் ஒரு சிலர் இது போல் வேண்டுமென்றே
கொரோனா வைரசை பரப்பும் செயலில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
Newstm.in

No comments:
Post a Comment