2019 - 2020 ஏறக்குறைய முடிவுக்கு
வந்திருக்கும் சூழலில், Fools Day எனப்படும் ஏப்ரல் 1, 2020 முதலாக,
நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன. மக்களிடையே சரியும்
வாங்கும் திறன், பொருளாதார நிலை, வாகனங்களின் விலை உயர்வு, பெட்ரோல்
வாகனங்கள் மீது அதிகரிக்கும் வரவேற்பு, Shared Mobility-ன் தாக்கம் என
ஏற்கெனவே பல விஷயங்கள், கடந்த பல மாதங்களாகவே புதிய வாகன விற்பனைக்குப்
பெரும் தடைக்கற்களாக இருந்து வருகின்றன. இந்தச் சூழலில் இவற்றுடன்
இணைந்துகொண்ட கொரோனா, 2020 மார்ச் மாதத்தின் பாதியை ஊரடங்கு உத்தரவின் கீழ்
கொண்டுவந்துவிட்டது. எனவே, எதிர்பார்த்தபடியே இந்த மாதத்தில் கார் விற்பனை படுபாதாளத்தை எட்டிவிட்டது!
இதில் அதிகப்படியான சரிவை மஹிந்திராவும், குறைவான
வீழ்ச்சியை ஹூண்டாயும் பெற்றுள்ளன; இந்தக் களேபரங்களுக்கு மத்தியில்
ஆச்சர்ய அதிசயமாக, எம்.ஜி நிறுவனம் மட்டும் 10.32% வளர்ச்சியைப்
பெற்றிருக்கிறது.
மார்ச் 2020 மாதம்: உள்நாட்டு கார் விற்பனை
மாருதி சுஸூகி: 76,976 கார்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது 47.4% குறைவு)
ஹூண்டாய்: 26,300 கார்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது 40.69% குறைவு)
கியா: 8,583 கார்கள் (பிப்ரவரி 2020 உடன் ஒப்பிட்டால், 7,061 கார்கள் குறைவு)
டொயோட்டா: 7,023 கார்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது 45.2% குறைவு)
டாடா: 5,676 கார்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது 68% குறைவு)
மஹிந்திரா: 3,384 கார்கள் (மார்ச் 2019 உடன் ஒப்பிடும்போது 88% குறைவு)
எம்ஜி: 1,518 கார்கள் (பிப்ரவரி 2020 உடன் ஒப்பிட்டால், 142 கார்கள் அதிகம்).

No comments:
Post a Comment