புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,577 ஆக
அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 83 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா
வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3,577 ஆகவும், உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கையும் 83 ஆகவும் அதிகரித்துள்ளது. 267 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 505 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளது.அதிகபட்சமாகமஹாராஷ்டிரா - 661தமிழகம் - 571 பேரும்,கேரளா -
445டில்லி - 306தெலுங்கானா - 269உ.பி.,- 227ராஜஸ்தான் -200குஜராத் - 122
பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்அதேபோல், மஹாராஷ்டிராவில் 24 பேரும்,
குஜராத்தில் 122 பேரும், தமிழகத்தில் 4 பேரும் கொரோனாவால்
உயிரிழந்துள்ளனர்.நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை செயலாளர்
கூறுகையில், இந்தியாவில் 3,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
79 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 472
பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது சராசரியாக
4.1 நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து
வருகிறது. டில்லி மாநாடு நடக்காமல் இருந்திருந்தால், அது 7.1 நாட்களாக
இருக்கும் என்றார்.

No comments:
Post a Comment