கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கோவையிலும்
கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாக புலி,
யானை, சிறுத்தை என்று வனவிலங்குகள் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த
சில வாரங்களுக்கு முன்பு இரண்டு யானைகள் உயிரிழந்தன.
புலிகள்
அதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி வனசரகத்துக்குட்பட்ட போத்தமடைப் பகுதியில் இரண்டு புலிகள் உயிரிழந்தன.
வனத்துறை விசாரணையில், இரண்டு புலிகளும் விஷம் வைத்து
இறந்துகிடந்த காட்டுப்பன்றியின் மாமிசத்தை சாப்பிட்டு உயிரிழந்ததாகக்
கூறப்பட்டது.
இந்நிலையில், போளுவாம்பட்டி வனசரகத்துக்குட்பட்ட
பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது.
இரண்டு யானைகளுக்கிடையே நடந்த சண்டையில் ஏற்பட்ட காயத்தால் அந்த யானை
உயிரிழந்ததாக வனத்துறையினர் கூறினர். இதைத்தொடர்ந்து, காரமடை
வனசரகத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு யானை இறந்துகிடப்பதாக வனத்துறைக்கு
நேற்று தகவல் கிடைத்தது.
யானை
6 வயது மதிக்கத்தக்க அந்த யானையின் உடலில் எந்தக் காயமும் இல்லை. குடல்
மற்றும் இரைப்பையில் எந்த உணவுப் பொருளும் இல்லை. அதன் பின் மூளையில்
ரத்தக் கசிவு இருந்தது. வெப்ப அயற்சியினால் (Heat Stress) ரத்தக் கசிவு
ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.
வால்பாறை அருகே
ஊசிமலை எஸ்டேட் பகுதியில் அழுகிய நிலையில் ஒரு சிறுத்தையின் உடல்
இருந்துள்ளது. வனத்துறை விசாரணையில், 5 வயது மதிக்கத்தக்க இந்த ஆண்
சிறுத்தை, மற்றொரு சிறுத்தையுடன் நடைபெற்ற மோதலில் காயமடைந்து
உயிரிழந்ததாகக் கூறினர். இந்நிலையில், கோவை அனுபாவி சுப்பிரமணிய சுவாமி
கோயில் அருகே ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சிறுத்தையும், மற்றொரு
சிறுத்தையுடன் சண்டைபோட்டு, காயமடைந்து உயிரிழந்ததாக வனத்துறையினர்
கூறியுள்ளனர்.
சிறுத்தை
இதனிடையே, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் உயிரிழந்த வழக்கில், ராசு,
கருப்புசாமி என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில்
தொடர்புடைய வெள்ளிங்கிரி, முருகன் என்ற இருவரை வனத்துறை சிறப்பு விசாரணைப்
படை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment