
கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளைத் தவிர வெளியில் வருபவர்கள் மீது போலீசார் தடியடியும்
சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து
போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையில் அண்மையில் டெல்லியில் தவித்த ஏராளமான தொழிலாளர்கள் இரவில் ஒரே பேருந்து நிலையத்தில் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்ததந்த மாநில அரசுகள் பேருந்துகள் மூலம் அவர்களை மீட்டன.
இதனிடையில் அண்மையில் டெல்லியில் தவித்த ஏராளமான தொழிலாளர்கள் இரவில் ஒரே பேருந்து நிலையத்தில் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்ததந்த மாநில அரசுகள் பேருந்துகள் மூலம் அவர்களை மீட்டன.

அப்படிதான் பேரெலி மாவட்டத்துக்குக் கூலித் தொழிலாளர்களை உத்தரபிரதேச மாநில அரசு அழைத்து வந்தது.
அவர்களை மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் சாலையிலேயே
ஒன்றாக அமர வைத்து அவர்களைக் கண்களை மூடச் சொல்லி கிருமி நாசினிகள்
தெளிக்கப்பட்டது.
இதனை வீடியோவாக எடுத்து அம்மாவட்டத்தின் ஆட்சியரே
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மனிதாபிமானமற்ற செயல் என்று பலரும்
தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இது
குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர்,
மாநிலத்துக்கு வந்த தொழிலாளர்கள் மீது தண்ணீரில் கலந்து குளோரின்
பீய்ச்சப்பட்டது. அதில் வேதியியல் பொருள்கள் ஏதும் கலக்கவில்லை. அதனால்தான்
அவர்களை நாங்கள் கண்களை மூடச் சொன்னோம். நாங்கள் மனிதாபிமானம் இல்லாமல்
நடக்கவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் சுத்தமும் சுகாதாரமும் முக்கியம்.
இத்தனை பேர் ஊருக்குள் வரும்போது நோய்த் தொற்று பரவாமல் பாதுகாப்பதே
எங்களது பொறுப்பு. அதனால்தான் இப்படிச் செய்தோம் என விளக்கம் அளித்தார்.
newstm.in
No comments:
Post a Comment