
கொரோனாவை தடுக்க பல மருத்துவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தாங்களே
சுயமாக பயன்படுத்துகின்றனர். பார்மனும் அதை எடுத்துக் கொண்டார். என்று
பிரதிக்ஷா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல் குமார் ஹசாரிகா
கூறினார்.
பார்மனுக்கு கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறிகள் இல்லை
என்றும், அவரது மரணத்திற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் காரணமா என்பது
மருத்துவர்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
அவர்
எத்தனை டோஸ் எடுத்தார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை , ஒருவேளை அது
இரண்டு அளவுகளாக இருக்கலாம் என்று ஹசாரிகா கூறினார். மலேரியா எதிர்ப்பு
மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்
தேசிய பணிக்குழுவால் ஒரு நோய்த்தடுப்பு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு
இந்த மருந்தை கொடுக்கலாம் என அது பரிந்துரைத்துள்ளது.கொரோனா பாதிப்பு
எதுவும் இதுவரை அசாமில் கண்டறியப்படவில்லை மற்றும் நோயாளிகள் அல்லது கொரோனா
அறிகுறிகளைக் காண்பிப்பவர்களுக்கு சோதனை மற்றும் சிகிச்சை அளிக்க அரசாங்க
ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
ஆனால்
தனியார் மருத்துவமனைகளில் சில மருத்துவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை
முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டதாக தகவல்கள் உள்ளன. ஹைட்ராக்ஸி
குளோரோகுயின் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து அரசாங்கம்
மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
Newstm.in
No comments:
Post a Comment