
புதுடில்லி: அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுபாடும் வராது
எனவும் ஊரடங்கு உத்தரவால் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் டில்லி முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ்
பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பிரதமர் மோடி அறிவித்ததன் படி, நாடு முழுவதும் நேற்று (மார்ச்
24) நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டில்லி
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் கூட்டாக
செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:மக்கள்
பீதியடைய தேவையில்லை.
நேற்று (மார்ச்24) மோடி பேசியதற்கு பின்னர், அனைவரும்
அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளின் முன் குவிந்தனர். அத்தியாவசிய
பொருட்களுக்கு எந்தவித தட்டுபாடும் வராது என உறுதியளிக்கிறேன். எனவே
ஊரடங்கு உத்தரவால் பொருட்கள் கிடைக்காது என பீதியடைய வேண்டாம் என மீண்டும்
கேட்டுக்கொள்கிறேன். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இ-பாஸ்
வழங்கப்படும். போலீஸ் கமிஷனர் 23469536 என்ற உதவி எண்ணை
அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment