
காஞ்சிபுரத்தில் நடைபெறும் தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்
நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க -வின் தமிழகப்
பொறுப்பாளரும், அக்கட்சியின் தேசியச் செயலாளருமான முரளிதர ராவ், முன்னாள்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காஞ்சிபுரம்
வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை
தரிசித்தனர்.

காமாட்சி அம்மனை தரிசித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் பொன்.
ராதாகிருஷ்ணன். ``சி.ஏ.ஏ உள்ளிட்ட பல சட்டங்கள் இந்த
நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் யாரையும் அப்புறப்படுத்தக்கூடியது இல்லை
என மிகத் தெளிவாகப் பலமுறை நாங்கள் கூறிவிட்டோம். இந்துக்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் கலவரம் உருவாக வேண்டும் எனத் தி.மு.க -வினர்
நினைக்கிறார்கள். 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற
நோக்கத்தில், அவர்கள் மக்களை முட்டாள்களாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான் கான் பேச்சும், ஸ்டாலினின் பேச்சும் ஒரே மாதிரி
அமைந்திருக்கிறது. நாடு மீண்டும் பிளக்கப்பட வேண்டும், மீண்டும் ஒரு
பாகிஸ்தான் உருவாக வேண்டும் என தி.மு.க விரும்புகிறது. பிரிந்துசென்ற
பாகிஸ்தானியர்களோடு உறவு வைத்துக்கொண்டு, அவர்களுக்கு மீண்டும் குடியுரிமை
கொடுக்க வேண்டும் என தி.மு.க சொல்கிறது.
`கஷ்டப்பட்டு பாகிஸ்தானைப்
பெற்றோம். சிரித்துக்கொண்டே இந்துஸ்தானைப் பெறுவோம்' என இந்தியா
பிரிக்கப்பட்டபோது முகமது ஜின்னா சொன்னார். அன்று ஜின்னா சொன்னதை
நடைமுறைப்படுத்தும் வகையில் ஸ்டாலின் அதற்குண்டான வேலைகளைச்
செய்துவருகிறார்.
ஜின்னாவின்
ஆவி தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அவரின்
பேச்சு இந்தியாவை எப்படிப் பிளக்க முடியும் என்பதிலேயே உள்ளது. இந்திய
மக்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2021-ம் ஆண்டுத் தேர்தல்
முடிந்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சி பா.ஜ.க அங்கம் வகிக்கும் அரசாகத்தான்
இருக்கும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். அதை நோக்கியே எங்கள் பயணம்
இருக்கிறது" என்றார்.
No comments:
Post a Comment