
கோட்டயம்: கேரளா அரசுக்கு கடும் நெருக்கடி தரும் வகையில் பிற மாநில
தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் சாலைகளில் ஒன்று திரண்டிருப்பதால்
கோட்டயத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் வெளிமாநில
தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர்.
டெல்லியில் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் தங்களது
சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில்
திரண்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநில முதல்வர்கள் சிறப்பு
பேருந்துகளை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் டெல்லியில் இருந்து
தொடர்ந்து பிற மாநிலத்தவர் வெளியேறி வருகின்றனர்.
No comments:
Post a Comment