திங்கள்சந்தை: கன்னியாகுமரி மாவட்டம்
பரசேரி அருகே புன்னவிளை கிராமத்தை சேர்ந்தவர் பொன்சிங்(29) சிவில்
இன்ஜினியரிங்கில் டிப்ளமோ பட்டதாரியான இவருக்கு சிறு வயது முதலே கலை
பொருட்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. 8ம் வகுப்பு படிக்கும் போதே
பொதுமக்கள் சாலையோரம் வீசும் காதிதம், பாட்டில்கள் மற்றும் மரக்கட்டைகளை
சேகரித்து கலை பொருட்களை செய்ய துவங்கினார். ஓவிய பயிற்சியோ கைவினை கலை
பொருட்கள் செய்யும் பயிற்சியோ பெறாத பொன்சிங் முழுக்க முழுக்க செலவில்லாமல்
தனது கிராம பகுதிகளில் சாலையோரம் பொதுமக்கள் பயன்படுத்தி வீசும் காகிதம்,
துணி, மது பாட்டில்கள் டி.வி. பிரிட்ஜ் பேக்கிங் போது பயன்படுத்தும்
தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து சுயமாகவே கலை பொருட்களை செய்ய
தொடங்கினார்.
தெர்மாகோல் மூலம் வாழைத்தார், மதுபாட்டில்களில் கலை
நயத்துடன் ஓவியங்கள், பறவைகளின் இறகுகள் மற்றும் காகிதங்களை கொண்டு மலர்
வகைகள், சி.டி இசை தட்டுகளில் கூடைகள். செடி இலைகள், காகித கூழ் கொண்டு
பானைகள், சணல், பனை ஓலை, தென்னை ஓலைகளை கொண்டு பொம்மைகள், களிமண்ணில்
பேன்சி அணிகலன்களை மிஞ்சும் அழகிய மாலைகள், காதணிகள், மர வேர்கள் கொண்டு
வரவேற்பறை அழகு சாதனங்கள் என எண்ண முடியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான கலை
பொருட்களை செய்து குவித்துள்ளார். இந்த கலையை தனது கிராம குழந்தைகளுக்கும்
கொண்டு சேர்க்கவேண்டும்.
மாணவர்களின் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றவேண்டும் என்று எண்ணிய பொன்சிங் வீடு வீடாக சென்று தனது கிராமத்தை சேர்ந்த 40க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்து இலவசமாக கைவினை கலை பொருட்கள் செய்யும் கலையை கற்று கொடுத்து வருகிறார். சில அரசு பள்ளிகளுக்கும் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற அவரது கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மாவட்டம், மாநில அளவிலான கைவினை கலை பொருட்கள் செய்யும் போட்டியில் பங்கேற்று 100க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று மாவட்ட பள்ளி கல்வி துறையின் பார்வையை தங்கள் கிராமம் மீது திருப்பியுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்ச்சி கொடுத்த பொன்சிங்கிற்கு சிறந்த கைவினை கலை பயிற்சியாளர் விருதும் கேடயமும் வழங்கப்பட்டுள்ளது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும் மட்காத கழிவுகளையும் கலை பொருட்களாக மாற்ற முடியும் என கூறும் பொன்சிங் அரசு அனுமதி அளித்தால் இந்த மட்காத கழிவுகளை கொண்டு சுய உதவி குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பயிற்ச்சி அளிக்க தயார். குப்பைகள் மூலம் தயாரிக்க படும் கலை பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அவர்களும் வருமானம் கிடைத்து பொருளாதாரத்தில் உயரும் வாய்புள்ளதாக கூறும் இவர், தான் தயார் செய்யும் கலை பொருட்களை விற்பனை செய்து அந்த வருமானத்தில் புற்றுநோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதோடு அவர்களின் குழந்தைகளுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று கலை பயிற்சியும் கொடுத்து வருகிறார். கூலி வேலை செய்யும் தனது தந்தையின் வருமானத்தில் தன் குடும்பம் இயங்கும் நிலையில் இளம் வயதில் தன் எதிர் காலத்தை கூட யோசிக்காமல் இந்த கலை பயிற்சியை சேவையாக செய்து வரும் இவரை மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment