கேரள மாநிலம் கண்ணூர் புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர்.
இவர் ஓமனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜாகீருக்கு ஆறு
மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்துக்குப் பின் ஜாகீர் ஷிபானாவை ஓமனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் ஷிபானா 3 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் ஜாகீர் நேற்று
வீட்டின் அருகே மைதானத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடச்
சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு
விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றுள்ளனர். அதற்குள் ஜாகீர் உயிரிழந்துள்ளார்.

ஆனால் இதனை ஜாகீரின் நண்பர்கள் ஷிபானாவிடமிருந்து மறைத்துள்ளனர்.
மேலும் ஜாகீருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவரை
மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். நீங்கள் இங்கு தனியாக இருக்க வேண்டாம்
என்று கூறி ஷிபானாவைக் கண்ணூருக்குத் திரும்பி செல்ல கூறியுள்ளனர். மேலும்
ஷிபானா ஜாகீரைப் பார்க்க வேண்டும் என்று கூறிய நிலையில், கொரோனா பாதிப்பு
என்பதால் அவரை பார்க்க முடியாது என்று கூறி சமாளித்துள்ளனர்.
பின்னர்
ஷிபானாவை ஜாகீரின் நண்பர்கள் கண்ணூர் செல்வதற்கு விமானம் ஏற்றியுள்ளனர்.
மேலும் ஜாகீரின் உடலையும் அதே விமானத்திலேயே ஷிபானாவுக்குத் தெரியாமலேயே
எடுத்துவந்துள்ளனர். மேலும் ஊருக்கு வரும்வரையில் அவருக்கு இதுகுறித்து
தெரியாமல் பார்த்துள்ளனர். பின்னர் ஷிபானா சொந்த ஊர் திரும்பிய பின்னரே
அவரிடம் ஜாகீர் உயிரிழந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்
சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments:
Post a Comment